ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நீண்ட நாள்களாக நடைப்பெற்று வந்த வலிமை படத்தின் பணிகள் தற்போது நிறைவுப் பெற்று வெளியிட்டுக்கு தயாராகி வந்தது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி வலிமை திரையரங்கில் வெளியிட படக்குழு முடிவு செய்தது. ஆனால் மீண்டும் கரோனா பரவல் காரணமாக அரசு விதித்த கட்டுப்பாட்டால், படத்தின் வெளியிட்டு தேதி மாற்றிவைக்கப்பட்டுள்ளது.
வலிமை படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கினர். மேலும் இப்படத்தில் சில சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்கள், இடம்பெற்றிருந்த சுமார் 15 இடங்களை வெட்டுமாறு படக்குழுவினருக்கு தணிக்கை குழு அறிவுறுத்தியது.
இதனால் 3 மணிநேரம் 10 நிமிடம் இருந்த வலிமை இப்போது 2 மணிநேரம் 58 நிமிடங்கள் 35 விநாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிகழ்வை சமூகவலைதளத்தில் தல – தளபதி ரசிகர் கொண்டாடி வருகின்றனர். அதற்கு காரணம் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் நீளமும் 2 மணிநேரம் 58 நிமிடங்கள் 35 விநாடிகளாகும். அதுமட்டுமல்லாது மாஸ்டர் திரைப்படத்திற்கும் தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியது.
மேலும் மாஸ்டர் திரைப்படம் முதலில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு 2021ஆம் ஆண்டு பொங்கல் கொண்டாட்டமாக வெளியானது. அதே போல் வலிமை படமும் வெளியிட்டு தேதியும் தற்போது மாற்றிவைக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் – வலிமை இரு படங்களுக்கும் இத்தனை ஒற்றுமை இருப்பதால் ரசிகர்கள் அதை சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…