காமெடி நடிகர் செந்திலின் உண்மையான குணம் இதுதானா? செந்திலை பற்றி அவரது மரு மகள் ஜனனி கூரிய தகவல்

காமெடி என்றாலே இன்று வரையில் முதலில் ஞாபகம் வருவது கவுண்டமணி செந்தில் நடித்த வாழைப்பழம் காமெடி தான். அவ்வாறு இவர்களின் காமெடி காம்போ மிகவும் அசத்தலாக இருக்கும். இவர்கள் இருவரும் சேர்ந்து திரையில் வந்து விட்டாலே போதும் ரசிகர்கள் அனைவருக்கும் கொண்டாட்டம் தான். சிரித்து சிரித்து வயிறு வலிக்கும் அளவிற்கு இவர்களது காமெடி மிகவும் சிறப்பாக இருக்கும். முன்னணி கதாநாயகர்களின் பல வெற்றிப் படங்களில் இவர்களது காமெடி தவறாமல் இடம் பெற்றிருக்கும்.

comedy

தற்போது செந்தில் அவர்களின் மகன் மணிகண்டன் பிரபுவும் அவரது மனைவி ஜனனியின் ஒரு பிரபல பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்துள்ளனர். அதில் தனது அப்பாவைப் பற்றி மணிகண்டன் அவர்களும் அவரது மனைவி ஜனனியும் பல சுவாரசியமான விஷயங்களை பதி விட்டனர்.

அவ்வாறு மணிகண்டன் அவர்கள் தனது அப்பாவான செந்திலிர்க்கும் கவுண்ட மணி அங்கிளுக்கும் தற்போது பேச்சுவார்த்தை இல்லை என பல வதந்திகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் அவை எதுவும் உண்மை இல்லை. என் அப்பாவும் கவுண்டமணி அங்கிளும் இன்று வரையில் நல்ல நண்பர்களாக பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று கூறினார்.

comedy-combo

இவருக்கு சிறு வயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்ததாம். ஆனால் தனது அப்பாவின் ஆசைக்காக மருத்துவ படிப்பை படிக்க தொடங்கி இருக்கிறார் மணிகண்டன். இதற்கிடையில் உன்னை எனக்கு பிடிக்கும் என்ற ஒரு படத்திலும் நடித்திருக்கிறார். என்றாலும் அதன் பிறகு இவருக்கும் மருத்துவத்திலேயே ஆர்வம் இருந்ததால் அதனைத் தொடர்ந்து படித்து பல் மருத்துவராயிருக்கிறார்.

காலேஜ் படிப்பு படித்து கொண்டிருக்கும் பொழுது இவருக்கும் ஜனனி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டது. ஜனனி அவர்களின் குடும்பத்தினர் நடிகர் செந்திலின் நகைச்சுவைக்கு ரசிகர்களாக இருந்துள்ளனர். எனவே செந்திலின் மகன் மணிகண்டன் பிரபு என்று அறிந்து முதலில் சாதாரணமாக பேசத் தொடங்கியிருக்கிறார் ஜனனி. அவருக்கும் மணிகண்டனை பிடித்துப் போக அவர்களது வீட்டிலும் ஒரு டாக்டரையே மாப்பிள்ளையாக தேர்ந்தெடுக்க வேண்டுமென்று இருந்ததார்களாம். எனவே டாக்டரான மணிகண்டன்பிரபுவை ஜனனியின் குடும்பத்தாரும் தங்களின் மாப்பிள்ளையாக ஏற்றுக்கொண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

janani

அதன் பின் ஜனனி தனது மாமனாரான செந்திலை பற்றியும் கூறத் தொடங்கியுள்ளார். முதலில் செந்தில் ஜனனியுடன் அவ்வளவாகப் பேசமாட்டாராம். ஜனனிதான் எப்போதும் அவரை கூப்பிட்டு கூப்பிட்டு பேசிக் கொண்டிருப்பாராம். ஆனால் இப்பொழுதெல்லாம் மாமனாரும் மருமகளும் அதிக விஷயங்களை பகிர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்களாம். அவ்வாறு மிகவும் சுவாரசியமான மனிதர் தனது மாமனார் என்று புகழாரம் சூட்டி பேசியுள்ளார் ஜனனி.

manikandanbrbu

அது மட்டுமல்லாமல் அவர்களது வீட்டில் செந்திலுக்கு இரண்டு மகன்கள் இருப்பதால் ஜனனியுடன் சேர்த்து இன்னொரு மருமகளும் வீட்டில் இருக்கிறார்களாம். இவர்கள் இருவரையும் செந்தில் அவரது மனைவியும் தங்களின் மகள்கள் போன்று பார்த்துக்கொள்கிறார்கள் எனவும் சந்தோஷமாக கூறியுள்ளார் நடிகர் செந்தில் அவர்களின் மருமகள் ஜனனி. அதுமட்டுமல்லாமல் எப்பொழுதும் காமெடியில் கலக்கிக் கொண்டிருந்த செந்தில் அவர்கள் இப்பொழுது ஒரு புதிய கதாபாத்திரத்தில் ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் இவர்கள் கூறியுள்ளனர்.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago