நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான பிக்பாஸ் சின்னத்திரையில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி, கலட்டா, சண்டை, சர்ச்சை, அதிரடி திருப்பங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெயர் போனது.
நூறுநாள் நடைப்பெறும் இந்த நிகழ்ச்சியை பார்பதற்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. பிக் பாஸ் சீசன் 5 சமீபத்தில் நிறைவுற்றது. பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னராக ராஜூ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராஜூ பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின் அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் தேடிவந்தது. அதையெல்லாம் அவர் தள்ளி வைத்து விட்டு, பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளராக இருந்த இமான் அண்ணாச்சியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார்.
பிக்பாஸில் ராஜூவுக்கு துணையாக இருந்த இமான் அண்ணாச்சி, கிட்டதட்ட 80 நாள்கள் போட்டியில் பங்கேற்று அதன்பின் வெளியேறினார். வெளியே வந்த இமான் அண்ணாச்சி, பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னராக ராஜூ வந்தால் நல்ல இருக்கும் என கருத்து தெரிவித்திருந்தார்.
பிக் பாஸ் சீசன் 5 இறுதி நிகழ்ச்சிக்கு இப்போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்களை விருந்தினராக பிக் பாஸ் குழு அழைப்பு விடுத்தது. இதில் இமான் அண்ணாச்சி கலந்துக்கொள்ளவில்லை. இது நெட்டிசன்கள் மத்தியில் பேச்சுப்பொருளானது. அதற்கு இமான் அண்ணாச்சி, படப்பிடிப்பு, டப்பிங் போன்ற பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டதால் இதில் கலந்துக்கொள்ள முடியவில்லை என கூறினார்.
இம்மான் அண்ணாச்சி வீட்டுக்கு வந்த ராஜூவை அவர் கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதுமட்டுமல்லாது கேக் வெட்டி இமான் அண்ணாச்சி, ராஜூவுக்கு ஊட்டினார். அதன் பின் இருவரும் சிறிது நேரம் பேசினர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…