பிக் பாஸ் சீசன் 5 வில் சாவித்திரி ஜெமினி கணேசன் அவர்களின் பேரனான அபிநய் 16போட்டியாளர்களளில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார். தற்போது பிக்பாஸ் வீட்டில் சில நாட்களாக கதை சொல்லட்டுமா என்ற டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் கன்டஸ்டன்ட் அனைவரும் தங்களின் வாழ்க்கை பயணத்தை கதையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு அபிநய் அவர்களும் தனது கதையைச்சொல்லலும் பொழுது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளார்.
இவ்வாறு இவர் கதை சொல்லிய பிறகு ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். ராமானுஜர் என்ற திரைப்படம் தனது முதல் படம் இல்லை என்றும், அதற்கு முன்னதாக ஒரு பெரிய படத்தில் ஒப்பந்தமான தாகவும் அதற்குப் பின்னரே ராமானுஜம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனவும், அதிலும் தான் ஜெமினி கணேசன் சாவித்திரி அவர்களின் பேரன் என்று சொன்ன பிறகே இந்த படத்திற்கான வாய்ப்பும் கிடைத்தது என மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.
அவ்வாறு இப்படம் தனது திறமைக்காக கிடைத்தது அல்ல தனது தாத்தா பாட்டியின் பெயருக்காக கிடைத்தது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் இதனை பதிவிட்டிருந்தார். அபிநய் ஒப்பந்தமாகி கையெழுத்திட்டு முடிவு செய்து வைத்திருந்த திரைப்படம் திடீரென வேறு ஒரு பிரபல நடிகரின் வாரிசுக்கு கைமாறியது. இவரது முதல் பட வாய்ப்பை வேறு ஒரு பிரபல நடிகரின் பேரன் நடித்திருந்தார்.
இவ்வாறு தன்னிடமிருந்து தட்டிப் போன பட வாய்ப்பை பற்றி மேலோட்டமாக அபினை கூறினாரே தவிர அந்த நடிகர் யார்? அந்த படத்தின் இயக்குனர் யார்? என்பதைப் பற்றியும் வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால் இறுதியாக அதே இயக்குனர் எதிர்காலத்தில் டிசைன் தன்னை வைத்து ஒரு படம் இயக்குவார் எனவும் உறுதியாக தெரிவித்தார். இவ்வாறு இவர் உறுதியை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவருக்குப் பெரிய அளவில் ஆதரவு அளித்து வருகின்றனர்.
தற்போதுரசிகர்களள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அபிநய் நடிக்க இருந்த அந்த படம் கும்கி. அபிநய் நடிக்க இருந்த அந்த படத்தில் நடித்த மற்றொரு நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் விக்ரம்பிரபு ஆவார். ஏனெனில் ராமானுஜம் படத்திற்கு முன்னர் விக்ரம் பிரபு நடித்த கும்கி திரைப்படம் தான் வெளியானது.
பிரபுசாலமன் இயக்கிய கும்கி திரைப்படத்தில் நடிக்க அபிநய் கமிட்டாகி இருக்கலாம் என்றும், அதனை விக்ரம் பிரபு தட்டிப்பறித்து நடித்து விட்டார் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன் சூப்பர் ஹிட்டான கும்கி திரைப்படத்தில் அபிநய் நடித்திருந்தால் அவருக்கு தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்திருக்கும் என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…