Homeடிவிபாக்கியலட்சுமி சீரியலின் முக்கியமான அடுத்தகட்ட சீக்ரெட்டை போட்டுடைத்த ஜெனிபர். இனி அந்த சீரியலில் இது தான்...

பாக்கியலட்சுமி சீரியலின் முக்கியமான அடுத்தகட்ட சீக்ரெட்டை போட்டுடைத்த ஜெனிபர். இனி அந்த சீரியலில் இது தான் நடக்கபோகிறதா?

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் சீரியலில் மிக முக்கியமானது பாக்கியலட்சுமி சீரியல். இல்லத்தரசிகள் மத்தியில் இந்த சீரியல் மிகவும் பிரபலம். முழுக்க முழுக்க குடும்பத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியலின் நாயகியாக குடும்பத்தலைவி பாக்கிய லட்சுமி இருக்கிறார்.

bakyalakshmi

இந்த சீரியலில் பாக்யலட்சுமியின் கணவராக கோபி இருக்கிறார். இந்த ஜோடிக்கு 2 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளது. பெரிய பையனுக்கு திருமணம் முடிந்துள்ளது. இந்த சீரியலில் தற்போது வரை வில்லன், வில்லியாக யாரும் இல்லை என்றாலும் கோபி தான் மனைவியை ஏமாற்றும் கணவராக உள்ளார்.

கோபி தனது முன்னாள் காதலியான ராதிகாவோடு தொடர்பில் உள்ளார். ராதிகா தன் கணவனை பிரிந்து வாழ்ந்து வருவதால், அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கோபி அவரிடம் நெருங்கி பழக எண்ணுகிறார். இதற்கிடையில் ராதிகாவுக்கும் பாக்யலக்ஷ்மிக்கும் நட்பு ஏற்படுகிறது.

jenifer

சீரியல் இப்படி சென்றுகொண்டிருக்கையில் அந்த சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்த ஜெனிபர் அந்த சீரியலை விட்டு விலகிவிட்டார். இதுகுறித்து அவரது ரசிகர்கள் பலர் அவரிடம் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பினர். தயவு செய்து மீண்டும் சீரியலுக்கு வாருங்கள் என்று அன்பு வேண்டுகோள் வைத்தனர்.

இந்த நிலையில் ஜெனிபர், தான் ஏன் சீரியலை விட்டு விலகினேன் என்ற காரணத்தை கூறியுள்ளார். அதாவது தற்போது வரை ராதிகா கதாபாத்திரம் பாசிட்டிவாக இருந்தாலும் வரும் காலங்களில் அந்த கதாபாத்திரம் நெகடிவாக மாற உள்ளதாம்.

jenifer

நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்பதாலும் வேறு சில குடும்ப காரணங்களாலும் தான் சீரியலை விட்டு விலகியதாக ஜெனிபர் கூறியுள்ளார். ஆக ராதிகா கதாபாத்திரம் தான் வரும் காலத்தில் அந்த சீரியலில் வில்லியாக மாற உள்ளது என்பது இதில் இருந்து தேறிய வந்துள்ளது. தற்போது ராதிகா கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்து வருகிறார்.

சற்று முன்