test header
- Advertisement -

பாலா படத்தில் சிம்ரன் குத்தாட்டம் போட்டதற்கான காரணம் இது தான். ரகசியத்தை போட்டுடைத்த பயில்வான்.

இயக்குனர் பாலாவின் படங்கள் எப்போதும் ஒரு தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஹீரோ, ஹீரோயின் என்று இல்லாமல் அனைவருக்கும் மேக்கப் ரீதியாக பார்த்தால் ஒரு வித சமத்துவம் இருக்கும். ஆனால் இதுவே அவருக்கு சில நேரங்களில் நெகடிவாகவும் அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. சினிமா குறித்து பல அறிய தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் பயில்வான் ரங்கநாதன் அவர்கள், பாலா குறித்தும் சில விஷயங்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அது குறித்து விரிவாக பார்ப்போம்.

bailvan ranganadhan
Bayilvan Raganadhan

பொதுவாக பாலா படங்களை நாம் பார்த்தோமானால், குறிப்பாக ஹீரோயின்கள் அழகாக காட்டப்படுவதில்லை. அவர்கள் வெள்ளை நிறத்தில் இருந்தாலும் கருப்பு சாயம் பூசி அவர்களின் நிறங்கள் மாற்றப்படுவது உண்டு. இதற்க்கு எடுத்துக்காட்டாக நான் கடவுள், பிதாமகன், பரதேசி இப்படி பல படங்களை கூறலாம்.

-advertisement-

பாலா இப்படி படம் எடுப்பதற்கான காரணம் என்ன, எதனால் அவர் ஹீரோயின்களை இப்படி காட்டுகிறார் என்று பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் பைல்வானிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, பாலாவிற்கு ஹீரோயின்களை அழகாக காட்டக்கூடாது என்ற என்ன உள்ளதாக தெரிகிறது. எதையாவது வித்யாசமாக செய்ய வேண்டும் என்று எண்ணுபவர் பாலா. நல்ல மேக்கப்பில் உள்ளவர்களை கூட கிழவி போல காட்ட நினைப்பார் பாலா என்று கூறியுள்ளார் பயில்வான்.

Director Bala
Director Bala

அதே சமயம் பாலா படம் தயாரிப்பாளர்களுக்கு லாபம் தருமா என்றால் நிச்சயம் இல்லை. பாலா படங்கள் காலம் கடந்து பேசப்படலாம் ஆனால் தயாரிப்பாளர்கள் நஷ்டம் தான் அடைகிறார்கள். ஹீரோயின்களை அழகாக காட்டுங்களேன் என்று விநியோகஸ்தர்கள் பலர் கூறியதன் விளைவாக தான் பிதாமகன் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு சிம்ரன் குத்தாட்டம் போடும் காட்சியை படத்தில் வைத்தார் பாலா என்று கூறி உள்ளானர் பயில்வான்.

பாலாவின் படங்கள் பொதுவாக மிகவும் அமைதியாக இருக்கும் என்றும், அவரின் படங்களுக்கு இளையராஜாவின் இசை அதிகப்படியான வலு சேர்கிறது என்றும், ஒருவேளை இசை இல்லாமல் பாலாவின் படங்களை பார்த்தால் அனைவரும் தூங்கிவிடுவோம். அந்த அளவிற்கு இளையராஜாவின் இசை அவருக்கு பக்க பலமாக உள்ளது என்றும் கூறியுள்ளார் பயில்வான்.

-advertisement-

Leave a Comment