கடந்த 2012 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கிய முதல் படம் அட்டகத்தி. இந்த படத்தில் தினேஷ், நந்திதா ஸ்வேதா, ஐஸ்வர்யா, ராஜேஷ் போன்ற புதுமுகங்கள் அறிமுகமாகி இருந்தனர். அனைவராலும் எளிதில் கவரக்கூடிய விதமாக இப்படம் அமைந்ததே இப்படத்திற்கான மிகப்பெரிய வெற்றி.

காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்த இப்படம், இக்கால காதலை மிகவும் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் மீண்டும் மீண்டும் பார்க்கும் விதமாகவும் எடுக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படத்தின் பாடல்கள் அனைவராலும் முணுமுணுக்க பட்டது. தினேஷ் இப்படத்தில் புதுமுகம் என்றாலும் அவரின் நடிப்பு தோரணை, முதல் படம் என்பது போல் இல்லாமல் நடிப்பில் கைதேர்ந்தவர் போல் நடித்திருப்பார். சிறிய பட்ஜெட் அளவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் வியாபார ரீதியாக லாபம் ஈட்டிய படமாகவே இருந்தது.
மேலும் பா. ரஞ்சித் அவர்கள் அட்டக் கத்தியை தொடர்ந்து கார்த்தி, கலையரசன் நடித்த மெட்ராஸ் என்ற படத்தையும் இயக்கினார். இப்படம் வடசென்னையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். மேலும் இப்படத்தில் அறிமுக நாயகியாக கேத்ரின் தெரசா நடித்திருந்தார்.
இப்படம் பா. ரஞ்சித்தின் சினிமா பயணத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்தப் படத்திற்குப் பிறகு பா. ரஞ்சித் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி என்ற திரைப்படத்தை இயக்கினார். மாஸ் ஹீரோ என்று அனைவராலும் அறியப்பட்ட சூப்பர் ஸ்டார் அவர்கள் இப்படத்தின் மூலம் தனது முழு நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தி இருந்தார். இப்படத்தின் கதை மலேசியாவிலுள்ள தாதாவின் கதையை மையமாக கொண்டு அமைந்திருந்தது. 2016 ஜூலை 22 அன்று வெளியிடப்பட்ட இப்படம் தென்னிந்தியாவில் 2200 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. அதேசமயம் உலக அளவில் அதிக வசூலான இந்திய திரைப்படம் என்ற சாதனையையும் இப்படம் பெற்றது.

இந்த நிலையில் பா. ரஞ்சித் அவர்கள் இயக்கிய அட்டகத்தி படத்தின் வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது. மொத்தம் இந்த படத்துக்காக அப்போது சுமார் 3.5 கோடி செலவு செய்யப்பட்ட நிலையில், படம் சுமார் 4.5 கோடி அளவிற்கு விற்கப்பட்டுள்ளது. தனது முதல் படத்திலேயே 1 கோடி ரூபாயை தயாரிப்பாளருக்கு லாபம் தரும் வகையில் இயக்கியுள்ளார் பா. ரஞ்சித்.