நடிகர் ஆர்யாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா? ஹீரோயின்களுக்கே டப் கொடுப்பாங்க போலயே.

Arya

கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் நடிகர் ஆர்யா. இவர் நடிப்பில் வெளிவந்த நான் கடவுள், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி இப்படி பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனதோடு வசூல் ரீதியாக தயாரிப்பாளர்களுக்கும் ஒரு நல்ல வருவாயை பெற்றுத்தந்தது என்றே கூறலாம்.

Arya

சமீபத்தில், ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை மிகப்பெரிய ஹிட் ஆனதோடு ஆர்யாவுக்கு ஒரு அங்கீகாரத்தையும் பெற்று தந்துள்ளது என்றே கூறலாம். குத்து சண்டையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஆர்யாவின் கடின உழைப்பு பல காட்சிகளில் தெள்ளத்தெளிவாக தெரியும். இந்த படத்திற்காக இவர் கடினமான பல பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இவர் தன் முதல் படத்திலேயே, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதை பெற்றது குறிப்பிட தக்கது. அதனை தொடர்ந்து நான் கடவுள் படத்துக்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதிற்கு முன்மொழியப்பட்டார். இதே படத்திற்காக விஜய் விருத்திற்கும் இவர் முன்மொழியப்பட்டார். தனது கலை பயணத்தில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்து இன்று வரை அடுத்தடுத்த நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறார் ஆர்யா.

Arya sister

இவருக்கு ஒரு தங்கை உண்டு. அவர் பெயர் தஸ்லீனா. கடாபி என்னும் தொழிலதிபரை மணந்த இவர் தற்போது கத்தாரில் வசிக்கிறார். ஆர்யாவின் தங்கைக்கு கடந்த பிப்ரவரி மாதம் லாட்டரி மூலம் 32 கோடி ரூபாய் பரிசு விழுந்தது குறிப்பிட தக்கது.

ஆர்யா தனது குடும்ப புகைப்படங்களை பெரிதாக வெளியிடாத நிலையில் தற்போது ஆர்யாவின் தங்கை புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதை கண்ட ரசிகர், ஆர்யாவுக்கு இவ்வளவு அழகான தங்கையா, இவர் படத்தில் கூட நடிக்கலாமே என்று கூறி வருகின்றனர்.

Leave a Comment