சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத், தனது வாசிப்பு திறமையால் பிக் பாஸ் நிகழ்ச்சி வரை சென்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட அடிக்கடி இவரை இந்த வீட்டு நிலவரங்களை செய்தி போல கூறுமாறு அங்குள்ளவர்கள் கேட்டுக்கொண்டதை நாம் பார்த்திருப்போம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை அனிதா கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தார். பிக் பாஸிற்கு பிறகு தற்போது விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அவர் பெங்கேற்றது தனது நடன திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் அனிதா சம்பத் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நபரின் ப்ரோபயிலையும் , அந்த நபர் தனது தோழிக்கு நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக சொல்லி அவரிடம் தவறாக பேசிய சேட் விவரங்களையும் பதிவிட்டிருந்தார்.

அனிதா வெளியிட்ட அந்த குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் ஐடி ஒரு “fake” ஐடி என்பது தெரியவந்தது. உண்மையில் அதே பெயரில் உள்ள நபர் அதை செய்யவில்லை என்பதும் தெரியவந்தது. அது குறித்த அந்த நபர் அனிதாவிடமும் கூறி உள்ளார். அனிதாவும் அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதே நேரத்தில் தனது பெயருக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் ஒரு “fake” ப்ரோபயிலை உருவாகி அதில் இருந்து பெண்களுக்கு தவறான மெசேஜ் அனுப்பிய நபரை கைது செய்ய வேண்டும் என்று அந்த நபர் போலீசில் புகார் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தனி ஒரு மனிதனின் நர்பெயரை மட்டும் அல்லாமல் பல பெண்களின் வாழ்க்கையிலும் விளையாடும் அந்த “fake id” மனிதரை கண்டு பிடித்து கைது செய்ய வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.