இங்கிலாந்தை பூர்வீகமாக கொண்ட ஏமி ஜாக்சன் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமான ஒருவராக உள்ளார். மிஸ் டீன் வேர்ல்ட் எனும் பட்டத்தை 17 வயதில் வென்ற ஏமியை இயக்குனர் ஏ.எல் விஜய் தான் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அதற்க்கு ஏற்றார் போல அந்த படத்தின் கதைக்களமும் இருந்தது.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது, மதராச பட்டினத்தில் ஒரு ஆங்கிலேயே பெண்ணிற்கும், இங்குள்ள ஒரு சாதாரண ஆணிற்கு இடையே ஏற்பட்ட காதல் தான் அந்த படத்தின் கருவாக இருந்தது. அந்த படத்தில் ஏமி ஜாக்சன் தான் ஆங்கிலேயே பெண்ணாக நடித்திருப்பார். ஆர்யா இங்குள்ள சாதாரண ஆளாக நடித்திருந்தார்.
முதல் படத்திலேயே ஏமியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அந்த கதாபாத்திரத்தில் ஏமியை தவிர வேறு யாரும் இவ்வளவு கட்சிதமாக பொருந்தி இருக்க மாட்டார்கள் என்று கூறும் அளவிற்கு அதை அவர் சிறப்பாக செய்திருந்தார். மதராச பட்டினத்தை தொடர்ந்து அவர் தாண்டவம், ஐ போன்ற பல்வேறு படங்களில் நடிக்க துவங்கினார்.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 2.0 படத்தில் இவர் ஒரு ரோபோவாக நடித்திருப்பார். சூப்பர் ஸ்டார் படம் என்றாலே உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் திரையிடப்படும். அந்த வகையில் அந்த படத்தின் மூலம் ஏமி உலக புகழ் பெற்றார்.
இன்று உச்சத்தில் இருந்தாலும், ஏமி ஜாக்சன் தனது முதல் படத்திற்காக எவ்ளவு சம்பளம் வாங்கினார் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இயக்குனர் ஏ.எல் விஜய் அவர்கள் மதராசபட்டினம் படம் குறித்து ஒரு பேட்டியில் கூறுகையில் ஏமியின் சம்பளம் குறித்தும் கூறியுள்ளார். அதாவது ரூ. 5 லட்சம் தான் ஏமி ஜாக்சன் அந்த படத்திற்கு சம்பளமாக பெற்றுள்ளார்.