சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் 10 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து அதன்பின்னர் காதலித்து பெரியோர் ஆசிர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தமிழில் வெளியான சிம்பு மற்றும் திரிஷா நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா, படம் தெலுங்கில் ஹே மாய சேஸவே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இருந்தது இப்படத்தில் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஹீரோ ஹீரோயின்களாக நடித்து இருந்தனர்.

இப்படத்தின் மூலமாகவே இருவரும் நண்பர்களாக ஆனார்கள். பின்பு காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர். தெலுங்கு வட்டாரமே ஆச்சரியப்படும் அளவுக்கு சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் காதலித்து வந்தனர். தற்பொழுது இவர்களின் விவாகரத்து செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியாக உள்ளது ஏன் எப்படி செய்கிறார்கள் என்று கேள்வி கேட்கும் அளவிற்கு அனைவருக்கும் மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
போன லாக் டவுனில் வந்த சமந்தாவின் பிறந்தநாளுக்கு நாக சைதன்யாவே செய்து கொடுத்த பிறந்தநாள் கேக் மிகவும் வைரலாக பரவியது. இவ்வாறு அந்நியோன்யமாக இருந்த இந்த தம்பதியினர் ஏன் திடீரென்று விவாகரத்து முடிவை எடுத்துவிட்டனர் என்று பலருக்கும் பல கேள்விகள் எழுப்பி உள்ளது.
இந்நிலையில் தான் தமிழில் வெளியான தலைவி பட நாயகி கங்கனா ரனாவத் அதிர்ச்சிகர தகவல் ஒன்றை தெரிவித்திருக்கிறார். நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் விவாகரத்திற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமீர்கான் தான் முக்கிய காரணம் என்று பகிரங்க அறிவிப்பை தெரிவித்துள்ளார். மேலும் கங்கனா ரணாவத் எப்பொழுதுமே சர்ச்சைக்குரிய விஷயங்களில் அடிக்கடி மாட்டிக் கொள்வார் என்று தான் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான விளக்கத்தையும் அவரே தற்போது கொடுத்திருக்கிறார்.

அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக இருந்தது ஆனால் சில சூழ்நிலையின் காரணமாக அவர் படத்திலிருந்து விலகிக் கொண்டார்.அதனால் அப்படத்தில் நாக சைதன்யா நடித்திருந்தார். சமீபத்தில் விவாகரத்தான அமீர்கானின் ஆலோசனைகளை கேட்டுத்தான் நாக சைதன்யாவும் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க கூடும். மேலும் அவர் diverse expert என்றும் கடுமையான வார்த்தைகளால் சாடி உள்ளார்.

இந்த விவாகரத்து விஷயத்தில் சமந்தாவிற்கு துளிகூட விருப்பம் இருந்திருக்காது என்றும் அவர் தனது இன்ஸ்டா பேஜில் பதிவிட்டிருக்கிறார். தற்பொழுது கங்கனா ரனாவத் இன் இந்தக் குற்றச்சாட்டு தான் மிகவும் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.