Homeபொழுதுபோக்குமைக் மோகனோடு தன்னை ஒப்பிட்டு, இந்த கதாபாத்திரத்தில் நான் நடித்தால் நானும் மார்க்கெட் இழந்துவிடுவேன் ...

மைக் மோகனோடு தன்னை ஒப்பிட்டு, இந்த கதாபாத்திரத்தில் நான் நடித்தால் நானும் மார்க்கெட் இழந்துவிடுவேன் என்று கூறிய தல அஜித்.

ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் மைக் மோகன் அவர்கள். இவர் நடித்த பல படங்களை 100 நாட்களை மிக எளிதாக கடந்தன. ஒரு சில வருடங்களிலேயே பல படங்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார் இவர். ஆனால் ஏனோ, எப்படி வேகமாக வளர்ந்தாரோ அதே வேகத்தில் சரியவும் செய்தார்.

Mic Mohan

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது அதிகப்படியான ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகர்களில் தல அஜித் மிகவும் முக்கியமானவர். எந்த விதமான திரை பின்புலமும் இல்லாமல் தானாகவே முயன்று ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து எடுத்துவைத்து இன்று இந்த நிலைக்கு வந்துள்ளார். ஆரம்பகாலத்தில் இவர் கதைகளை தேர்வு செய்கையில் ஒரு சில கதாபாத்திரங்கள் தனக்கு ஒத்துவராது என்பதை வெளிப்படையாகவே இயக்குனர்களிடம் தெரிவித்துள்ளார்.

அப்படி அஜித் வேண்டாம் என்று கூறிய காதாபாத்திரங்களில் ஒன்று தான் “நீ வருவாய் என” படத்தின் ஹீரோ கதாபாத்திரம் என்று சமீபத்தில் அந்த படத்தின் இயக்குனர் ராஜகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். முதலில் அந்த படத்தில் விஜய் ஹீரோவாக நடிப்பதாகவும் அஜித் கெஸ்ட் ரோலில் வருவதாகவும் பேசப்பட்டதாம்.

பிறகு விஜக்கு தேதி கிடைக்காததால் அவரால் ஹீரோவாக நடிக்கமுடியாமல் போனதாம். ஆகையால் தான் கெஸ்ட் ரோலில் நடிக்க தயார் என்று தெரிவித்தாராம் விஜய். உடனே இயக்குனர் அஜித்திடம் சென்று விஷத்தை கூறி, நீங்கள் ஹீரோவாக நடியுங்கள், விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம் என்று கூறி உள்ளார்.

Ajith

இதை கேட்ட அஜித், இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்றும், அதற்க்கு காரணம் ஹீரோயின் ஹீரோவை தொடர்ச்சியாக வேண்டாம் என்று வெறுப்பதற்கான காட்சிகள் இருக்கிறதென்றும், இதே போலதான் மௌனராகம் படத்தில் மைக் மோகனை ஹீரோயின் கடைசிவரை வேண்டாம் என்று ஒதுக்குவார், அதே சமயம் அவர் கார்த்திக்கை காதலிப்பது போன்ற காட்சிகள் அந்த படத்தில் இடம்பெற்றிருக்கும். அந்த படத்தில் மைக் மோகனை விட கார்த்திக்கிற்கு தான் பெயர் கிடைத்து. அதன் பிறகு மைக்மோகனும் மார்க்கெட்டை இழந்தார்.

ஆகையால் ஹீரோயின் வெறுப்பது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்தால் எனக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்காது. ஆகையால் இந்த கதையை பொறுத்தவரை கெஸ்ட் ரோல் தான் எனக்கு சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த தகவலை இயக்குனர் ராஜகுமாரன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறி உள்ளார்.

சற்று முன்