test header
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலக இது தான் காரணம். உண்மையை போட்டுடைத்த ஐஸ்வர்யா

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி சென்டிமென்டை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலிற்கு பேமிலி ஆடியன்ஸ் அதிகம் என்றே கூறலாம். இந்த சீரியலில் கடைசி தம்பியாக நடிக்கும் கண்ணனிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் வி.ஜெ தீபிகா. இவர் இந்த சீரியலில் இருந்து தற்போது மாற்றப்பட்டுள்ளார். அவர் மாற்றப்பட்டதற்கான காரணம் குறித்து தற்போது அவரே வெளிப்படையாக கூறியுள்ளார்.

vj deepika

-advertisement-

ஆரம்பத்தில் இந்த சீரியலில் வி.ஜெ தீபிகா நடித்த போது, இந்த பெண் கண்ணனுக்கு ஏற்ற ஜோடி இல்லை. இவரை மாற்றுங்கள் என்று பலரும் கம்மெண்ட்களில் தெரிவித்திருந்ததை நாம் பார்திரும்போம். ஆனால் தற்போது அவர் சீரியலில் இருந்து நீக்கிய பிறகு, ஏன் அவரை நீக்கினீர்கள். அவரே நடிக்கட்டும் என்று கூறும் அளவிற்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அனைவரின் மனதையும் கவர்ந்திருந்தார் வி.ஜெ தீபிகா.

அவர் சமீபத்தில் ஒரு யுடியுப் சேனலிற்கு அளித்திருந்த பேட்டில், தான் பாண்டியன் ஸ்ட்ரோரில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை கூறி இருந்தார். அதாவது தனது முகத்தில் அதிக அளவில் பருக்கள் இருப்பதாகவும். அதை சரி செய்துகொள்ள விஜய் தொலைக்காட்சி சார்பில் சில கால அவகாசம் கொடுத்ததாகவும். அனால் அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் பரு சரியாகவில்லை என்றும் அதனால் தன்னை நீக்கிவிட்டதாகவும் கூறி இருந்தார்.

vj deepika

-advertisement-

அதே சமயம், முகப்பரு காரணமாக, சீரியலில் மேக்கப் முதல் பல விஷயங்களுக்கு அந்த பரு இடைஞ்சலாக இருந்ததாகவும், வேறு வழி இல்லாமல் தான் விஜய் தொலைக்காட்சி இந்த முடிவை எடுத்ததாகவும், இதனால் தனக்கு எந்த மனவருத்தமும் இல்லை என்றும் அவர் கூறி இருந்தார்.

Saai gayathri

வி.ஜெ தீபிகா சீரியலில் இருந்து விளக்கப்பட்டதை தொடர்ந்து அவரின் காதாபாத்திரத்தில் தற்போது “ஈரமான ரோஜாவே” சீரியலில் நடித்திருந்த சாய் காயத்திரி தற்போது கண்ணன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார். அவராவது கண்ணனோடு நீண்ட நாட்கள் தொடர்ந்து நடிப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

-advertisement-

Leave a Comment