test header
- Advertisement -

குஷ்புவால் மட்டும் தான் முடியுமா? என்னால் முடியாதா என்று சவால் விடும் அளவிற்கு இளைமைக்கு திரும்பிய கஸ்தூரி. புகைப்படம் இதோ.

குஷ்பூ என்றால் இன்றைய தலைமுறை பிள்ளைகள் பலருக்கும் அவரை ஒரு அரசியல் பிரமுகராக தான் தெரியும். ஆனால் 90களில் சினிமாவில் கொடிகட்டி பரந்த நாடிகளில் மிகவும் முக்கியமான ஓர் இடம் குஷ்பூவிற்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. கடந்த 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான குஷ்பூ, தனது நடிப்பாற்றல் மூலம் உச்சத்தை எட்டினார்.

Actress Kushboo
Actress Kushboo

தற்போது குஷ்பூ அரசியலில் பிசியாக இருந்தாலும் சமீபத்தில் அவர் வெளியிட்ட போட்டோக்கள் சில இணையத்தில் வைரலாக பரவியது. தன்னுடைய இளமை காலத்தில் குஷ்பூ எப்படி இருந்தாரோ அதே போன்ற ஒரு தோற்றத்தில், உடல் எடையை குறைத்து இன்றை நடிகைகளுக்கே சவால் விடும் அளவிற்கு மாறி இருந்தார்.

-advertisement-

குஷ்புவை போலவே நடிகர் பிரபுவும் சமீபத்தில் தனது எடையை குறைத்து போட்டோ வெளியிட்டிருந்தார். இதனால் மீண்டும் சின்ன தம்பி பார்ட் 2 படம் ஏதாவது எடுக்க போகிறார்களா என்ன? என்ற அளவிற்கு சில கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தன. இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது சமூக வலைதள பக்கத்தில் மாடர்ன் உடையில் சில போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

 kasthuri
Actress Kasthuri

இந்த போட்டோக்களை கண்ட ரசிகர்கள் பலர், இது என்னடா, 90ஸ் நடிகைகள் எல்லாம் இப்படி இளமை திரும்பியது போல போட்டோ வெளியிடுகிறார்களே என்று கூறி வருகின்றனர். நடிகை கஸ்தூரியை பொறுத்தவரை, கடந்த 1991 ஆம் ஆண்டு வெளிவந்த “ஆத்தா உன் கோயிலிலே” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

Actress Kasthuri
Actress Kasthuri

அவர் எவ்வளவோ படங்களில் நடித்திருந்தாலும், நடிகர் சத்யராஜ் நடிப்பில் வழிவந்த அமைதிப்படை படத்தின் மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். சமீபத்தில் இவர் படங்கள் எதிலும் பெரிதாக தலைகாட்டவில்லை என்றாலும் அவ்வப்போது சில விவாத நிகழ்ச்சிகளில் பெங்கேற்று வருகிறார். அதோடு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3ல் இவர் பங்கு பெற்றது குறிப்பிட தக்கது.

-advertisement-

Leave a Comment