தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித்.
அஜித் திரைத்துறையை தாண்டி துப்பாக்கி சுடுதல், ஆளில்லா விமானம் இயக்குதல், பைக், கார் ரேசிங் போன்றவற்றிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்,
அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். இது அஜித்துக்கு 60ஆவது படமாகும். நீண்டநாள்களாக படப்பிடிப்பு நடைப்பெற்று வந்த நிலையில், இறுதியாக திரைக்கு வர தயாராக உள்ளது.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு ‘வலிமை’ ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக அரசு அறிவித்துள்ள கட்டுபாடுகள் காரணமாக வலிமை வெளியிட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
வலிமை படத்தைத்தொடர்ந்து அஜித் ஹெச். வினோத் இயக்கும் புதிய படத்தில் மீண்டும் நடிக்கிறார். இப்படத்தை வலிமை போன்று நீண்டநாள்களாக இழுக்காமல் விரைவில் முடிக்க படக்குழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக படக்குழுவினர் ஹைதராபாத்தில் தங்கிஉள்ளனர். தற்காலிகமாக ஏகே 61 என பெயரிடப்பட்ட இப்படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
வலிமை திரைப்படமும் இந்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் ஒரே ஆண்டில் அஜித்துக்கு இரண்டு படங்கள் வெளியாவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அஜித்தின் திரைவாழ்க்கையில் அவரது ரசிகர்கள் முக்கியமானவர்கள் காரணம் மற்ற நடிகர்களைவிட அஜித் அதிகப்படியான தோல்வி படங்களை கொடுத்துள்ளார். ஆனால் அப்போதும் அஜித்திற்கு துணையாக அவரது ரசிகர்கள் நின்றனர். அதனால் தான் சினிமாவில் இவருக்கு தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.
ஆனால் காலப்போக்கில் அஜித் மேல் உள்ள அன்பு ரசிகர்களுக்கு அதிகமாகியது. இதனை பார்த்த அஜித் தன்னை மட்டும் நம்பி யாரும் இருக்கக்கூடாது. அவரவர் வாழ்க்கையில் பல சாதனைகள் படைக்க வேண்டும் எனக் கருதி தனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் என கூறினார்.
இதேபோல் காமெடி நடிகர் கவுண்டமணி சினிமாவில் பிரபலமாக இருந்த போது ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கி உள்ளார். அப்போது அவருக்கும் ரசிகர் மன்றம் வைக்க ரசிகர்கள் முன்வந்துள்ளனர். ஆனால் கவுண்டமணி தனக்கு அதில் விருப்பமில்லை என கூறியுள்ளார்.
இதுவரைக்கும் கவுண்டமணி, அஜித் மட்டுமே ரசிகர் மன்றம் தங்களுக்கு வேண்டாம் என கூறியுள்ளார்கள். மேலும் எந்த ஒரு நிகழ்ச்சி விழாவிற்கும் இருவரும் அதிகம் செல்ல மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…