80,90களில் பிறந்த அனைவருக்கும் காமெடி நடிகர் என்றால் சட்டென நினைவுக்கு வருவது செந்தில், கவுண்டமணி தான். இவர்கள் இருவரும் சேர்ந்து நம்மை ஏராளமான வகையில் சிரிக்க வைத்துள்ளார்கள். பொதுவாக செந்தில் கவுண்டமணி காமெடி என்றாலே செந்தில் ஏதாவது எடக்கு முடக்காக கேள்வி கேட்பதும் கவுண்டமணி அதற்க்கு பதில் சொல்லி அவரை முறைப்பது அல்லது அடிப்பதாக இருக்கும்.

கரகாட்டக்காரன் படத்தில் இவர்கள் கூட்டணியில் உருவான வாழைப்பழம் காமெடி இன்றளவும் பிரபலம். அதை மையமாக வைத்து பிற்காலத்தில் ஏராளமான காமெடிகள் வந்தன. சின்ன கவுண்டர் படத்தில் செந்தில் கேட்கும் சில கேள்விகள் நமக்கே புதியதாக இருக்கும். இப்படி ஒவ்வொரு காமெடியையும் இவர்கள் பார்த்து பார்த்து செதுக்கி இருப்பார்கள்.
ஒரு கட்டத்தில் இந்த கூட்டணியோடு நடிகர் வடிவேலும் இணைந்தார். இவர்கள் மூவரும் சேர்ந்து செய்யும் இளநீர் காமெடி வயிறு குலுங்க நம்மை சிரிக்க செய்யும். செந்தில் கவுண்டமணி இருந்தால் தான் படம் ஓடும் என்று கூறி, அவர்களின் தேதிக்காக இயக்குனர்கள் காத்திருந்த காலமும் உண்டு.
ஒரு கட்டத்தில் சந்தில் மற்றும் கவுண்டமணி என இவருடைய இடத்தையும் வடிவேலு நிரப்ப தொடங்கினார்.
அதன் பிறகு இந்த ஜோடி பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை. வெகு சில படங்களில் மட்டும் கவுண்டமணி ஹீரோக்களோடு இணைத்து காமெடி செய்ய துவங்கினார்.

இப்படி காமெடி ஜாம்பவான்களான இருவரில் ஒருவரான செந்தில், தற்போது தன்னுடைய மகனில் குழந்தைகளோடு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.



