கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த குறும்பு படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிகிதா துக்ரல். சிபி ராஜ் நடிப்பில் வெளிவந்த “வெற்றிவேல் சக்திவேல்”, சரத்குமார் நடிப்பில் வெளிவந்த சத்ரபதி போன்ற படங்களில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் அதன் பிறகு இவருக்கு பெரிதாக கதாநாயகி வாய்ப்பு கிடைக்க வில்லை.

சிறு சிறு வேடங்களில் அவ்வப்போது தலையை காட்டிவந்த நிகிதா, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த சரோஜா படத்தின் பாடலான “கோடான கோடி” பாடலில் நடனம் ஆடி அனைவரின் மனதையும் கவர்ந்தார். இன்றளவும் இந்த பாடலில் இடம்பெற நடனம் பிரபலம்.
இவர் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுகு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களை நடித்துள்ளார். கன்னடா பிக் பாஸ் முதல் சீசனில் பாகேற்ற இவர், அந்த சீசனில் இரண்டாம் இடம் பிடித்தார். இவர் கடைசியாக 2018 ஆம் ஆண்டில் ராஜசிம்மா என்ற கன்னட படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு தற்போது சீரியல்களில் நடிக்க துவங்கி உள்ளார். இவர் ககன்தீப் சிங்க் என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதற் பிறகு இவருக்கு குழந்தையும் பிறந்தது. இவர் தனது குடும்பதோடு இருப்பது போன்ற பல புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பல புகைப்படங்களை ஆயோர ஆயிர கணக்கானோர் லைக் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இவர் திரைப்படத்திலும் மீண்டும் தோன்றுவார் என்று எதிர்பார்க்கலாம்.