டிக் டாக் மூலம் பலர் பிரபலம் அடைந்திருந்தாலும், அதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் என்றால் அது ஜி.பி முத்து தான். இவர் ஆரம்பத்தில் டிக் டாக்கில் பலரோடு சேர்ந்து பல பாடங்களுக்கு டூயட் செய்து பிரபலம் அடைந்தார். பிறகு தனக்கு வரும் கமெண்ட்களை கொண்டு அந்த கமெண்டை பதிவிட்டவரைகளை திட்டியே பிரபலம் அடைந்தார்.

சமீபத்தில், ஜி.பி முத்து பிக் பாஸ் செல்கிறார் என்ற ஒரு செய்தி பரவலாக பேசப்பட்டது. பல மீடியாக்கள் வெளியிட்ட போட்டியார்களின் உத்தேச பட்டியலில் கூட இவரின் பெயர் இருந்தது. அதற்க்கு ஏற்றார் போல இவர் பிக் பாஸ் செட்டிற்கு முன்பு நின்று போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.
இதனால் ஜி.பி முத்து பிக் பாஸ் போவது உறுதி என பலரும் தெரிவித்தனர். இந்த நிலையில் பிக் பாஸிற்கு தான் செல்லவில்லை என்பதை உறுதியாக கூறிள்ளார் ஜி.பி முத்து. அதற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், எனக்கு மொபைல் இல்லாமல் இருக்க முடியாது. அதோடு என் பொண்டாட்டி பிள்ளைகளை பார்க்காமல் என்னால இருக்கவே முடியாது.

அதே சமயம் எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அளவிற்கு மன பக்குவம் இல்லை. நான் பிக் பாஸ் செட்டின் முன்பு போட்டோ வெளியிட்ட போது நண்பர்களில் ஒரு பகுதியினர் நீங்கள் பிக் பாஸிற்கு செல்லுங்கள் என்றும், இன்னொரு பகுதியினர் செல்லவேண்டாம் என்று கமெண்ட் மூலம் தெரிவித்திருந்தனர் என்று கூறியுள்ளார். அதே போல தனக்கு பிக் பாசில் கலந்து கொள்வதற்காக எந்த அழைப்பும் இதுவரை வரவில்லை என்பதையும் கூறியுள்ளார்.
ஒரு வேலை நீங்கள் பிக் பாஸிற்கு சென்றால் எத்தனை நாட்கள் அங்கு உள்ளே இருப்பீர்கள் என்ற கேள்விக்கு, அதை என்னாலேயே சொல்ல முடியாது. நான் ஜாலியாக இருக்கும் ஆள். உள்ளே சென்று அடக்கி வைத்தால் என்னென்ன டென்ஷன் வரும் என்று என்னாலேயே சொல்ல முடியாது என்று கூறியுள்ளார் ஜி.பி முத்து.