வெளியானது சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட ரிலீஸ் தேதி – ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழ் திரை உலகில் முன்னனி இளம் கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவ கார்த்திகேயன். இவர் தற்போது நடித்து முடித்துள்ள புதிய திரைப்படம் “பிரின்ஸ்”. இந்த படத்தை இயக்குநர் அனுதீப் KV இயக்கியுள்ளார். இந்த படத்தில் நாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மற்றும் மாடலான ரியா போஷப்கா நடித்துள்ளார்.

24 வயதாகும் நடிகை ரியா போஷப்கா ஹிந்தி சினிமா உலகில் கடந்த அண்டு (2021ல்) வெளியான “ஸ்பெசல் OPS 1.5: தி ஹிம்மாட் ஸ்டோரி” என்ற வெப் சீரிசின் மூலமாக இந்திய சினிமா உலகில் அறிமுகமானவர். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் “பிரின்ஸ்” படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார் நடிகை ரியா போஷப்கா.

“பிரின்ஸ்” படத்தில் நடிகர் சிவ கார்த்திகேயன் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றி காட்டும் டூர் கைடாக வேலை செய்கிறார். இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வழக்கம் போல இந்த படமும் நகைச்சுவை, காதல், சண்டை என அனைத்து அம்சங்களும் நிறைந்த மசாலா படமாக தான் இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த “பிம்பிலிக்க பிலப்பி” என்ற பாடன் யூடியூபில் வெளியிடபட்டு ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தது குரிப்பிடதக்கது. இதுவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகபடுத்தி உள்ளது.

ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள “அயலான்” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியாகாமல் இருக்கும் நிலையில் “பிரின்ஸ்” படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்த நிலையில் இந்த படம் தீபாவளியை ஒட்டி அக்டோபர் 21ம் தேதி வெளியாகும் என்று படத்தின் இயக்குநர் அனுதீப் கூறியுள்ளார.

Leave a Comment