test header
- Advertisement -

இந்த மாதம் 3 பிரம்மாண்ட இயக்குநர்களின் படம் ரிலீஸ் ஆகின்றது- தமிழ் திரை ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

கொரொனா லாக் டவுன் முடிந்து இப்போது தான் தமிழ் சினிமா உலகம் நார்மலான நிலைக்கு வந்துள்ளது. கொரொனா காலகட்டத்தில் OTTயிலே பல படங்கள் வெளியானது. பல பிரம்மாண்ட இயக்குநர்கள் இதற்காகவே தங்கள் படத்தினை வெளியிடாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் கொரொனா  ஊரடங்கு முற்றிலுமாக முடிந்து சினிமா உலகம் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ள நிலையில் தொடர்ந்து புதிய படங்கள் தியேட்டர்களில் வெளியாகி வருகின்றது.

-advertisement-

இந்த (செப்டம்பர்) மாதம், தமிழ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்றே கூறலாம். காரணம் தமிழ் திரை உலகில் உள்ள 3 பெரிய இயக்குநர்களின் படங்கள் இந்த மாதம் வெளியாக உள்ளது. நாளை (15 செப்டம்பர்) இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தனிந்தது காடு திரைப்படம் வெளியாக உள்ளது.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நாயகனாகவும் நடிகை எல்லி அர்வம் நாயகியாகவும் நடித்துள்ள “நானே வருவேன்” திரைப்படமும் இந்த மாதம் 29ஆம் தேதி வெளியாக உள்ளது. தனுஷ் நடிப்பில் அவருடைய அண்ணன் செல்வராகவன் இயக்கும் படம் என்பதால் இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

-advertisement-

இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், ஐஷ்வர்யா ராய், த்ரிஷா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள “பொன்னியின் செல்வன் பார்ட் 1” படம் இந்த மாதம் 30ஆம் தேதி வெளியாக உள்ளதும் குறிப்பிடதக்கது.

ஆக இந்த மாதம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்றே கூறலாம். நடிகர் சிம்பு, தனுஷ் நடிக்கும் படங்களும் பிரம்மாண்ட தயாரிப்பான பொன்னியின் செல்வன் படமும் வெளியாவாதால் ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர்.

Leave a Comment