தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அட்லி. இவர் ஆர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து விஜய்யை வைத்து மூன்று படங்களை இயக்கியுள்ளார்.

விஜய் – அட்லி கூட்டணியில், ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ போன்ற படங்கள் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அட்லி இயக்குநராக மட்டுமல்லாது சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் போன்ற படங்களை தயாரித்தும் உள்ளார்.

தற்போது அட்லி பாலிவுட்டில் ஷாருக் கான், நயன்தாராவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தியில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியடவுள்ளன. கரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஷாருக் கான் காட்சியை தவிர நயன்தாராவின் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதாக தெரியவந்ததுள்ளது. பாலிவுட்டை தொடர்ந்து அடுத்தாக டோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜூனை வைத்து அட்லி படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிக்கின்றன.

அட்லி – அல்லு அர்ஜூன் படத்தை லைக்கா நிறுவனம் ரூ.100 கோடியில் தயாரிக்க இருப்பதாகவும் இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெளியிட முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அட்லி தமிழ் நடிகர்களை விட்டுவிட்டு மற்ற மொழி நடிகர்கள் வைத்து படங்களை இயக்க முடிவு எடுத்திருப்பது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இப்படங்களுக்கு பிறகு மீண்டும் அட்லி தமிழ் படங்களை இயக்குவார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.



