தமிழ் சினிமாவில் ‘துள்ளுவதோ இளமை’ என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். இவர் தனுஷின் சகோதரும் கூட. செல்வராகவன் ‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’, ‘இரண்டாம் உலகம்’, ‘என்ஜிகே’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என பல படங்களை இயக்கியுள்ளார்.

செல்வராகவனின் படம் புதிய கதைகளம், வித்யாசமான திரைக்கதை, என தமிழ் சினமாவில் மாறுப்பட்டு இருப்பதால் இவரது படங்களுக்கு தனி ரசிகர்களே உள்ளனர். முதலில் இவரது படம் பிடிக்காமல் போனாலும் அது சில வருடங்களுக்கு பின் அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் படமாகவே
அமைகிறது.
செல்வராகவன் தமிழ்சினிமாவில் இயக்குநராக மட்டுமல்லாது, திரைக்கதை ஆசிரியர், நடிகராகவும் வலம் வருகிறார். இவர் ‘சாணிக் காகயிதம்’, ‘பீஸ்ட்’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சமூகவலைதளப்பக்கமான ட்விட்டரில் செல்வராகவன் தெரிவித்துள்ளார். அதில், “எனக்கு இன்று (ஜன 23) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 அல்லது 3 நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தோர் தயவுசெய்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளவும். தயவுசெய்து கவனமுடன் இருங்கள். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார். முன்னதாக செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலிக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.
🙏🏼🙏🏼 pic.twitter.com/jqqPQVEVOT
— selvaraghavan (@selvaraghavan) January 23, 2022
திரையுலக பிரபலங்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், சத்யராஜ், த்ரிஷா, குஷ்பு, மீனா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பலரும் தற்போது தொற்றிலிருந்து குணமடைந்து விட்டனர். செல்வராகவன் கரோனாவிலிருந்து
விரைந்து மீண்டு வர ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



