நாகசைத்தன்யா சொன்ன அந்த ஒரு வார்த்தை.. மனம்மாறினாரா சமந்தா? – குழம்பி தவிக்கும் ரசிகர்கள்

sam

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சம்ந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் இருவரும் இணைந்து சினிமாவில் நடித்து வந்தனர்.

sam

இந்நிலையில், கடந்தாண்டு சமந்தா தனது சமூகவலைதளப்பக்கத்தில் நாகசைத்தன்யாவை விட்டு பிரிவதாக அறிவித்தார். இவரின் இந்த அறிவிப்பு சமூகவலைதளங்களை மட்டும்மல்ல ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா துறையிலும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனிடையே நாகசைதன்யா கூறும்போது பிரிவு என்பது பரவாயில்லை. ஏற்றுக் கொள்ளக்கூடியது தான். அவரவர்களின் சொந்த நலனுக்காக எடுக்கப்பட்ட பரஸ்பர முடிவு. சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால், எனக்கும் மகிழ்ச்சியே. அத்தகைய சூழ்நிலையில் விவாகரத்து என்பது சிறந்த முடிவாக இருக்கும் என்று கூறினார்.

sam

இதைத்தொடர்ந்து சமந்தாவும் நாகசைத்தன்யாவும் அவரவர் பாதையில் பயணிக்க ஆரம்பித்தனர். புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய பாடல் சமூகவலைதளத்தில் பெரும் வைரலானது. இதற்காக அவருக்கு ரூ.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சமீபத்தில் நாகசைதன்யா அளித்த பேட்டியில், திரைப்படங்களில் தனக்கு ஏற்ற ஜோடி சமந்தாதான் என்று கூறியிருந்தார். இவரின் இந்த கூற்று ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சமந்தா தனது சமூகவலைதளப்பக்கத்தில் விவகாரத்து குறித்தான பதிவை நீக்கியுள்ளார்.

sam

சமந்தாவின் இந்த செயல் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமந்தாவும் நாகசைத்தன்யாவும் மீண்டும் இணைவாரா என்ற எதிர்பார்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Leave a Comment