பிக் பாஸ் பாவ்னி ரெட்டிக்கு திடீரென எகிறிய சமூக வலைதள பாலோவர்ஸ். காரணம் இதானாம் தெரியுமா..

Pavni Bigg boss Tamil

பிக் பாஸ் சீசன் 5 கானா அனைத்து போட்டியாளர்களின் புகைப்படங்களும் தற்போது இன்ஸ்டாலவில் வைரலாக பரவி வருகிறது. இப்போது ட்ரெண்டாகி உள்ள பாவ்னி ரெட்டியின் போட்டோவும் இன்ஸ்டாவில் வைரலாக பரவி வருகின்றது. போன சீசனில் ஷிவானி யும் இந்த முறையை கடைபிடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவானி பிக்பாஸில் இருந்தாலும் அவரது புகைப்படம் இன்ஸ்ட பக்கத்தில் வலம் வந்து கொண்டு இருந்தது. அதேபோல சீசன் தொடங்கி ஒரு நாளே ஆன இத்தருணத்தில் பாவ்னி ரெட்டி க்கு இவ்வளவு ஃபாலோ வார்சா என்று கேட்கும் அளவிற்கு அவருடைய பாலோவர்ஸ் அதிகரித்து கொண்டே வருவது ஆச்சரியமாக உள்ளது.

Pavni
Pavni

சின்னத்திரை சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வந்த பாவ்னி ரெட்டி கொஞ்ச நாட்களாக எந்த திரையிலும் வராமல் மௌனமாகவே இருந்தார். ஆனால் அவர் திரையில் தோன்றா விட்டாலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்தார். இப்பொழுது அவர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றது அவரது ரசிகர்களுக்கு குதூகலமாகவும் என்டர்டெயினாகவும் இருக்கும் என்றரே அவரது ரசிகர்கள் தங்களது கருத்துக்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

விஜய் டிவியில் சின்னத்தம்பி நாடகத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருந்தார் பாவ்னி. அதன்பிறகு அவரை எந்த சின்னத்திரை தொடர்களிலும் காணமுடியாதது அவரது ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. இப்பொழுது இவர் பிக்பாஸ் ஐந்தில் கலந்திருப்பது அவரை சின்னத் திரையில் காண வேண்டும் என்று உருகி தவித்த அவரது ரசிகர்களுக்கு பேரின்பமாகவே இருக்கும் என்று கூறலாம். மேலும் இந்த பிக் பாஸ் 5 பல போட்டியாளர்களுகு திருப்புமுனையாக இருக்கும் என்பதே உண்மை.

மேலும் பிக் பாஸ் 5 இல் பாவ்னி ரெட்டியின் பெயர் அடிபட தொடங்கியதிலிருந்தே இவரது ரசிகர்கள் மிகவும் ஆர்ப்பரிக்க தொடங்கிவிட்டனர் மேலும் நேற்று அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வது உறுதியான பிறகு அவரது ரசிகர்கள் அவருக்கு ஆர்மி அமைக்கும் பணியையும் தொடங்கி விட்டனர் என்பதே ஆச்சரியம்.

Pavni Bigg boss Tamil
Pavni Bigg boss Tamil

மேலும் பாவ்னி அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பல கஷ்டங்களை அடைந்திருந்தாலும் தற்போது அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து இருப்பது அவர் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் அவருக்குமே ஒரு புதுவித அனுபவத்தை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. தற்போது அவருக்கு இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 4 லட்சத்து 67 ஆயிரம் பாலோவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது. எது எப்படி இருந்தாலும் பிக்பாஸில் அவர் எப்படி காட்டப்படபோகிறார் என்பதை பொருத்தே அவர் எவ்வளவு நாட்கள் இந்த வீட்டில் இருக்கப் போகிறார் என்பது நமக்கு தெரியவரும். அதுவரையில் நாமும் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment