test header
- Advertisement -

மௌன ராகம் சீரியல் ஹீரோயினா இது. மாடர்ன் ட்ரெஸ்ஸில் எப்படி இருக்காங்க பாருங்க.

மௌன ராகம் பாகம் 2 மூலம் தற்போது சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் ரவீனா தகா. சன் தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு முன்பே சீரியலில் முகம் காட்டிய இவர் அதன் பிறகு பல சீரியல்கள், படங்கள் என பலவற்றில் நடித்துள்ளார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தில் கூட இவரை நாம் பார்த்திருப்போம்.

raveena daha

-advertisement-

ராட்சன் படத்தில் இவரின் நடுப்பு திறமை வெகுவாக பாராட்டப்பட்டது. அந்த படத்தில் சில காட்சிகளில் மட்டுமே இவர் நடித்திருந்தாலும் அனைவரின் மனத்திலும் பதியும் அளவிற்கு இவரின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து இவருக்கு மிக முக்கியமான பாத்திரம் மௌன ராகம் சீரியலில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த சீரியலில் முதல் பாகத்தின் ஹீரோவான கார்த்திக்கின் மகளாக இவர் இதில் நடிக்கிறார். இரண்டாம் பாகத்தை பொறுத்தவரை பல காதாபாத்திரங்கள் இருந்தாலும் ரவீனா தகாவின் கதாபாத்திரம் தனித்துவம் மிக்கதாக இருக்கிறது.

raveena daha

-advertisement-

இன்னும் சொல்லப்போனால் இவர் தான் இந்த பாகத்தின் நாயகி என்று கூறும் அளவிற்கு வடிவமைக்க பட்டுள்ளது. தற்போது சென்னையில் வசிக்கும் இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். நடிப்பு மட்டும் அல்லாமல் நடனத்திலும் இவர் நன்கு தேர்ச்சிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

raveena daha

அவ்வவ்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் இவர், தற்போது கருப்பு ஆடையில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த படங்கள் அனைத்தும் தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

-advertisement-

Leave a Comment