கடந்த 1989 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் நடிகை நீனா. அதை தொடர்ந்து 1990ல் வெளியான கேளடி கண்மணி படத்திலும் இவர் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார். அது தான் தமிழில் இவர் நடித்த முதல் படம். அதன் பிறகு வளர்ந்து பெரிய ஆள் ஆனதும் இவர், கண்ணாத்தாள் உட்பட பல படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் எப்படி இருக்கிறார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

கேளடி கண்மணி படத்தை தொடர்ந்து கடந்த 1997 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த காலமெல்லாம் காதல் வாழ்க படத்தில் இவரை நாம் கண்டிருப்போம். அந்த படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். விஜய் படத்தை தொடர்ந்து அதே வருடம் அஜித் நடிப்பில் வெளியான ராசி படத்திலும் இவர் நடித்திருந்தார்.
காலமெல்லாம் காதல் வாழ்க, ராசி போன்ற படங்களில் இவர் நடித்திருந்தாலும் அந்த படங்களில் இவர் நாயகியாக நடிக்க வில்லை. முதன் முதலில் இவர் நாயகியா நடித்த படம் என்றால் அது விடுகதை தான். 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தின் நாயகனாக பிரகாஷ் ராஜ் நடித்திருப்பார். மணிவண்ணன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து கண்ணாத்தாள் படத்தில் அம்மனாக நடித்த இவர், ரசிகர்கள் பலர் மனதில் சில காலம் அம்மனாகவே போற்றப்பட்டார். அதன் பிறகு 2000 ஆம் ஆண்டு வெளிவந்த நாகலிங்கம் என்ற பக்தி படத்திலும் இவரை நாம் கண்டிருப்போம். அதன் பிறகு அதே வருடத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த சுதந்திரம் படத்திலும் இவரை நாம் பார்த்திருப்போம்.

வெறும் படங்களில் மட்டும் அல்லாமல், தனது ஆரம்ப காலம் முதல் 2003 ஆம் ஆண்டு வரை இவர் பல சீரியல்களிலும் நடித்துள்ளார். சித்தி, அண்ணாமலை இப்படியான மெகா ஹிட் சீரியல்களில் இவரை நாம் பார்த்திருப்போம். இப்படி இருக்கையில் கடந்த 2004 ஆம் ஆண்டு இவர் செந்தில் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு இவர் இந்தியாவில் வாசிக்காமல் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இவருக்கு தற்போது சோனியா மற்றும் சஞ்சய் என இரு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.